மதுரை ரெயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில்
மதுரை ரெயில்வே கோட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:- 16848) வருகிற 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், வடமதுரா, வையம்பட்டி, மணப்பாறை வழியாக செல்லாமல், மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, தேவக்கோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் வழியாக திருச்சி சென்று மயிலாடுதுறைக்கு செல்லும்.
இதேபோல் நாகர்கோவில்- மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:- 16352) வருகிற 4-ந்தேதி மற்றும் 7-ந்தேதி மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து பின்னர் மும்பைக்கு புறப்பட்டு செல்லும். கன்னியாகுமரி- ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:- 12666) வருகிற 6-ந்தேதி மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து பின்னர் ஹவுரா புறப்பட்டு செல்லும்.
புதுக்கோட்டை வழியாக...
குருவாயூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:- 16128) வருகிற 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து பின்னர் சென்னைக்கு புறப்பட்டு செல்லும். மேலும் கன்னியாகுமரி - ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:- 17070) வருகிற 5-ந்தேதி மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து பின்னர் ஐதராபாதுக்கு புறப்பட்டு செல்லும்.
தூத்துக்குடி- கச்சகுடா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:- 17616) வருகிற 3-ந்தேதி விருதுநகரில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து பின்னர் கச்சகுடாவுக்கு புறப்பட்டு செல்லும். மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.