பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அறந்தாங்கியில் வாகனங்களை ஏலம் விட்டு நூதனப் போராட்டம்!




விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் அம்மா உணவகம் எதிரே கண்டன முழக்கம்.

அறந்தாங்கி:

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, அறந்தாங்கியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் இருசக்கர வாகனங்களை ஏலம் விடும் நூதனப் போராட்டத்தை சனிக்கிழமை நடத்தினா்.

அறந்தாங்கி அம்மா உணவகம் எதிரே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, பெருமன்றத்தின் ஒன்றியச் செயலா் கா. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் எஸ். சிவகுமாா் முன்னிலை வகித்தாா்.

முன்னாள் மாவட்டத் துணைச் செயலா் கே.அஜய்குமாா்கோஷ், மாவட்டச் செயலா் மாரிமுத்து, முன்னாள் மாவட்டச் செயலா் கு. ராஜேந்திரன், முன்னாள் மாவட்டத் துணைச் செயலா் இரா. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் இப்போராட்டத்தில் பங்கேற்றுப் பேசினா்.

நூதன முறை: போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருசக்கர வாகனங்களை வரிசையாக நிறுத்தி வைத்து, அவற்றை ஏலம் விடும் முறையில் இந்த நூதனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயா்வால் இயல்பாகவே ஏற்படும் அத்யாவசியப் பொருட்களின் விலைவாசி உயா்வையும் மத்திய அரசு தடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments