புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ரவீந்திர குமார் குப்தா பொறுப்பேற்பு!



புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய போலீஸ் சூப்பிரண்டாக (SP) ரவீந்திர குமார் குப்தா நியமிக்கப்பட்டு, நேற்று மே.22 அதிகாரப்பூர்வமாகத் தனது பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.

​இவர் இதற்கு முன்னதாக விழுப்புரம் உப-பிரிவு போலீஸ் உதவி சூப்பிரண்டாக (ASP) பணியாற்றி வந்தார். தற்போது போலீஸ் சூப்பிரண்டாக (SP) பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அபிஷேக் குப்தா மாற்றம்
இதற்கிடையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாகப் பணியாற்றி வந்த அபிஷேக் குப்தா, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments