கோபாலப்பட்டிணம் ரஹ்மானியா பெண்கள் மதரசாவில் புதிய கல்வி ஆண்டிற்கான மாணவியர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இது குறித்து மதரஸா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
பெண்களுக்கான உயரிய மார்க்கக் கல்வியை வழங்கி வரும் ரஹ்மானியா பெண்கள் மதரசாவில் கீழ்க்கண்ட படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:
ஆலிமா பட்டயப் படிப்பு: முறையான ஆலிமா பாடத்திட்டத்தின் கீழ் மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது.
நாஸிஹா பட்டயப் படிப்பு: குடும்பப் பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, தேர்வு இல்லாத 3 வருட பாடத்திட்ட வகுப்புகள்.
காரியா மற்றும் ஹாஃபிளா வகுப்புகள்: திருக்குர்ஆனை மனனம் செய்யவும், தஜ்வீத் முறைப்படி ஓதவும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை உடனடியாகப் பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அல்லாஹ்வின் பேரருளைப் பெறவும், சிறந்த மார்க்கச் சூழலில் கல்வி பயிலவும் இந்தச் சேர்க்கை ஒரு நல்வாய்ப்பாகும்.
கூடுதல் விபரங்களுக்கும், முன்பதிவுக்கும் மதரஸா அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளவும்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.