மீன்பிடி தடைக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் உற்சாகத்துடன் கடலுக்கு செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.
மீன்பிடி தடைக்காலம்
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் இருந்து 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். இந்நிலையில், தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தடைக்காலம் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுகத்தில் கரையில் நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
வேலை இழப்பு
இதையடுத்து மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையில் நிறுத்தி வைத்து பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் விசைப்படகுகளுக்கு வர்ணம் தீட்டுவது, என்ஜின்களின் பழுதை சரிசெய்வது, சேதமடைந்த வலைகளை சரி செய்வது, புதிய வலைகள் வாங்குவது போன்ற பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த மீன்பிடி தடைக்காலத்தால் மீன்பிடி தொழில் சார்ந்த ஐஸ்கட்டி தயாரிப்பு, கருவாடு தயார் செய்தல், படகுகளில் இருந்து மீன்களை கரைக்கு கொண்டு வந்து தரம் பிரித்தல் செய்யும் தினசரி கூலி தொழிலாளிகள், உப்பு விற்பனை என பலருக்கும் வேலை இழப்பு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
கடலுக்கு நாளை செல்கின்றனர்
இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்ட கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 3 மணிக்கு விசைப்படகுகளில் உற்சாகமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். மீன்பிடித்து விட்டு அவர்கள் நாைள மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 5 மணி முதல் கரைக்கு திரும்புவார்கள். தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க செல்லும் முதல்நாளில் இறால், நவர, பெரியபாறை, வாவல், வஞ்சீரம், சீலா மற்றும் பல்வேறு உயர்ரக மீன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக மீனவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
களைகட்ட தொடங்கியது
இதையடுத்து கடலுக்கு செல்வதற்காக படகுகளுக்கு டீசல் எடுத்து செல்வது, ஐஸ் எடுத்து செல்வது வலைகள் சரிபார்ப்பு, படகு, என்ஜின்கள் சரிபார்ப்பு பணிகள் என பரபரப்பாக காணப்பட்டது. மேலும் படகுகளுக்கு மாலையிட்டு தேசிய கொடி கட்டப்பட்டு தயார் நிலையில் வைத்துள்ளனா். இதனால் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் துறைமுகங்கள் இப்போதே களை கட்ட தொடங்கியது.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.