நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர் மீண்டும் சேர்க்கை: மணமேல்குடி ஆசிரியர்களின் நெகிழ்ச்சி நடவடிக்கை!



புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஹரிஹரன் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் இருந்தது கண்டறியப்பட்டது.

​இதனையடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவனின் வீட்டிற்கு நேரில் சென்றனர். அங்கு மாணவனின் பெற்றோரைச் சந்தித்து, மாணவர் பள்ளிக்கு வராததற்கான காரணங்களைக் கேட்டறிந்தனர். தொடர்ந்து, தற்காலத்தில் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் தொடர்ந்து படிப்பதன் மூலம் கிடைக்கும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து மாணவருக்கும் அவரது பெற்றோருக்கும் விரிவான ஆலோசனைகளை வழங்கினர்.

ஆசிரியர்களின் இந்த நெகிழ்ச்சியான ஆலோசனையைத் தொடர்ந்து, மாணவர் ஹரிஹரன் இன்று மீண்டும் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டு முறைப்படி வகுப்பில் சேர்க்கப்பட்டார்.

​பள்ளிக்குத் திரும்பிய மாணவருக்குத் தேவையான புதிய பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள் (நோட்டுகள்) மற்றும் சீருடைகள் உடனடியாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்வின் போது மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மதிப்பிற்குரிய தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் அவர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் ராமகிருஷ்ணன் அவர்கள் உடனிருந்து மாணவரை வாழ்த்தி வரவேற்றனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments