பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்




தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மேன்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கம் பத்ம விருது வழங்கிட அறிவித்துள்ளது. கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வருகிற 2027-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் பத்ம விருதுகள் (பத்ம விபூசன், பத்ம பூசன் மற்றும் பத்ம ஸ்ரீ) வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகள் தொழில், இனம், உத்யோகம், பாலினம் ஆகியவற்றிற்கு வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய மற்றும் விளையாட்டுக்களில் சாதனை புரிந்தவர்கள் https://awards.gov.in மற்றும் https://padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் இம்மாதம் 28-ந் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். (இணையதளம் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்) விண்ணப்பித்தவுடன் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்த ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம், என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments