கோபாலப்பட்டிணத்தில் வீதியில் இறந்து கிடக்கும் தெருநாய் — துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி: ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் அருகே பழைய காலனி செல்லும் வழியில் தெருநாய் ஒன்று இறந்து பல நாட்களாக அப்புறப்படுத்தப்படாமல் உள்ளதால், அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.

இதனால் அந்தப் பகுதியில் வசிப்பவர்கள், அவ்வழியே செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தரப்பில் கூறுகையில்:
இறந்து கிடக்கும் நாயின் உடலிலிருந்து வீசும் துர்நாற்றத்தால் இந்த வழியாக மூக்கைப் பொத்திக்கொண்டு தான் செல்ல வேண்டியுள்ளது. இப்படியே விட்டால் தொற்றுநோய்கள் பரவ வாய்ப்புள்ளது.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, இறந்து கிடக்கும் நாயின் உடலை அப்புறப்படுத்தி அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments