செய்யானத்தில் நெற்பயிர் கருகியதால் விவசாயி மயங்கி பலிபுதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அடுத்த செய்யானம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (40). தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்தார். மகசூலை விற்று மகள் திருமணத்தை  நடத்திவிடலாம் என எண்ணியிருந்தார்.
போதிய மழை இல்லாததால் நெற்பயிர்கள் கருகின.  இதனால்  கண்ணன் மனமுடைந்து காணப்பட்டார். 

இந்தநிலையில் நேற்று முன்தினம்  வயலுக்கு  சென்ற அவர் கருகிய பயிர்களை பார்த்தபடியே மயங்கி விழுந்தார். தகவலறிந்து  குடும்பத்தினர் வந்து பார்த்தபோது கண்ணன் இறந்து கிடந்தது  தெரியவந்தது. கடந்த 5 மாதங்களில் பயிர்கள் கருகிய அதிர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஐ எட்டியுள்ளது.

Post a Comment