புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்ச் 10 ஆம் தேதி 5 வயதுக்குள்பட்ட 1.63 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிக்கான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகள் வரும் மார்ச் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்பணிக்காக நகரப் பகுதிகளில் 47 மையங்களும், ஊரகப்பகுதிகளில் 1309 மையங்களும் என மொத்தம் 1356 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்கள், அனைத்து சத்துணவு மையங்களிலும் இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசுத் துறை மற்றும் தன்னார்வ அமைப்பினரும் இப்பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 5 வயதுக்குள்பட்ட மொத்தம் 1.63 லட்சம் குழந்தைகளுக்கு இந்தச் சொட்டு மருந்து புகட்டுவதற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன என்றார் உமாமகேஸ்வரி. கூட்டத்தில், சுகாதாரத் துறை துணை இயக்குநர்கள் பரணிதரன், கலைவாணி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.