புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 19,505 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதுகின்றனர்



புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள பிளஸ்1 பொதுத்தேர்வில் 19505 பேர் எழுதவுள்ளனர். 

அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் 3048 பேர், மாணவிகள் 3520 மொத்தம் 6568 பேர். புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் 3100 பேர், மாணவியர்கள் 4169 பேர் மொத்தம் 7269 பேர். இலுப்பூர் கல்வி மாவட்டத் தில் மாணவர்கள் 2417 பேர், மாணவியர்கள் 2968 பேர் மொத்தம் 5385 பேர்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவர்கள் 8565 பேர், மாணவிகள் 10657 பேர் என 19222 பேரும், தனியாக தேர்வெழுதுவோர் 283பேர் என 19505 பேர் தேர் வெழுதவுள்ளனர். தேர்வானது இன்று தொடங்கி மார்ச் 22ம் தேதி முடிவடைகிறது. முதன்மைக் கண்காணிப்பாளர்கள் 82பேர், கூடுதல் கண்காணிப்பாளர்கள் 3பேர், துறை அலுவலர்கள்  82பேர், கூடுதல் அலுவலர்கள் 3பேர், அறைகண் காணிப்பாளர்கள் 961பேர், பறக்கும் படையினர் 164பேர், வழித்தட அலுவலர்கள் 18பேர் தேர்வுப்பணியில் ஈடுபடவுள்ளனர்.


Post a Comment

0 Comments