பேஸ்புக் மூலம் நண்பர்களாகப் பேசி பழகி, நேரில் வரச்சொல்லி இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் தொந்தரவு செய்த பேஸ்புக் நண்பன் மற்றும் அவர்களின் நண்பர்கள் மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
பொள்ளாச்சியில் உள்ள ஜோதிநகர் பகுதியைச் சேர்ந்த சபரி என்கிற ரிஷ்வந்த் தனியார் கல்லூரியில் சிவில் எஞ்சினீரிங் படித்து வருகிறான், அதே பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவியுடன் பேஸ்புக் இல் நண்பராகப் பழகி வந்துள்ளான்.
சபரி சென்ற வாரம் அந்த பெண்ணை போனில் தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க வருமாறு அழைத்துள்ளான் சபரி. கடந்த 12 ஆம் தேதி அப்பெண்ணை ஊஞ்சவேலாம்பட்டியில் தனக்காகக் காத்திருக்குமாறு அவன் தெரிவித்துள்ளான்.
சபரியின் நண்பர்கள் வசந்தகுமார் (24), சதீஸ்குமார் (28), திருநாவுக்கரசு ஆகியோருடன் காரில் ஊஞ்சவேலாம்பட்டி வந்த சபரி, மாணவியை தாராபுரம் சாலையில் காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை மிரட்டி வற்புறுத்தி ஆபாசமாகப் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.
மொபைல் போனில் எடுக்கப்பட்ட ஆபாச புகைப்படங்களைக் காட்டி மாணவியை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். புகைப்படத்தை மாணவியிடம் காட்டி பாலியல் உறவுக்கு இணங்குமாறும் அவர்கள் வற்புறுத்தி உள்ளனர்
காரில் கூச்சலிடத் துவங்கிய மாணவியை பெரியாக்கவுண்டனூர் அருகே உள்ள சாலையில் இறக்கி விட்டு, அவரிடமிருந்த ஒரு பவுன் நகையை பறித்துக் கொண்டு தேவைப்படும் போது பணம் தர வேண்டும் எனவும், அழைக்கும் இடத்திற்கு நேரில் வரவேண்டும் என்றும் மிரட்டி உள்ளனர்.
தாங்கள் சொல்வதைச் செய்ய மறுத்தால் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அப்லோடு செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். தொடர்ந்து இவர்களின் மிரட்டலைத் தாங்கிக்கொள்ள முடியாத மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையை துவங்கிய காவல்துறை, மூவரையும் ஒன்றாகப் பிடிக்கத் திட்டமிட்டுக் காத்திருந்து, சபரி, வசந்த்குமார், சதீஸ்குமார் ஆகிய மூவரையும் ஜோதிநகர் பகுதியில் காவல்துறையினர் காருடன் கைது செய்துள்ளனர், மேலும் தப்பித்து ஓடிய திருநாவுக்கரசைத் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களில் இருந்து இது வரை 200 பெண்களின் வீடியோகள் கைப்பற்றப்பட்டுள்ளது. தற்பொழுது வெளியாகியிருக்கும் இந்த தகவல் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு ஆண்டுகளாக இயங்கி வந்துள்ள கும்பல் கல்லூரியில் படிக்கும் பெண்கள், பள்ளிக்கூடம் செல்லும் பெண்கள், திருமணமான பெண்கள் என்று பாகுபாடு இல்லாமல் நிறையப் பெண்களை இந்த கும்பல் மிரட்டி பணம் சம்பாதித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கும்பல் பெண்களைக் குறிவைத்து இயங்கி வந்துள்ளது.
பணக்கார பெண்கள் மற்றும் அழகான பெண்கள்
பணக்கார பெண்கள் மற்றும் அழகான பெண்களை மட்டும் இந்த கும்பல் குறிவைத்து மிரட்டி வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பேஸ்புக் மூலம் நண்பர்களாகப் பழகி, நட்பில் துவங்கி காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை மிரட்டி வாங்கி வந்துள்ளனர்.
பெற்றோர் செய்கின்ற பெரிய தவறு தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும். செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வை பாழாக்கிக் கொண்டிருக்கிறது.
பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன. செல்போன்களில் இது போன்ற நடமாடும் பாலியல் வக்கிர ஆபாச செயல்கள் இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.
ஆண்,பெண் பிள்ளைகளுக்கு செல்ஃபோன்கள் வழங்கினால் இருபாலரும் செல்ஃபோன்களை எப்படி பாவிக்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். கண்கானிக்க இயலாவிட்டால் அவர்களுக்கு செல்ஃபோன் வாங்கிக்கொடுக்காமல் இருப்பது சிறந்தது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.