தமிழகத்தில் நாளை 06/05/2019 இரவு முதல் தராவிஹ் தொழுகை நடத்தப்படும்- தலைமை ஹாஜி அறிவிப்பு!



தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை ஏதும் இன்று தென்படாததால் நாளை ரமலான் முதல் நோன்பு இல்லை என்றும், நாளை மறுநாள் 7-ஆம் தேதி முதல் நோன்பு தொடங்கப்படுவதாக தலைமை காஜி அறிவித்துள்ளார்.

சென்னையில் தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரம்ஜான் நோன்பு என்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றாகும். ரமலான் பண்டிகையொட்டி இஸ்லாமியர் புனித நோன்பு பிடிப்பது கட்டாய கடமைகளில் ஒன்று. முஸ்லிம்கள் ஒவ்வொருவரும், நோன்பு காலத்தில் பிறையை பார்த்து நோன்பு வைப்பதும், பிறையை பார்த்து நோன்பு நிறைவு செய்தல் வேண்டும்.

அதன்படி தமிழகத்தில் இன்று இரவு பிறை தென்படவில்லை என்பதால் நாளை முதல் நோன்பு இல்லை. நாளை மறுநாள் முதல் பிறை என கணக்கில் எடுத்து கொண்டு 7-ம் தேதி முதல் நோன்பு தொடங்கும் என தெரிவித்துள்ளார். இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் என்ற சிறப்பு தொழுகை நாளை முதல் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments