உலக அளவிலான சிலம்பப் போட்டி: புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் தகுதி!!!



ஆசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்று உலகளவில் நடைபெறவுள்ள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் புதுகை மாவட்டத்தைச் சேர்ந்த சிலம்பாட்ட வீரர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆசிய அளவிலான 4 ஆவது சாம்பியன்சிப் சிலம்பப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை, மலேசியா, பங்களாதேஷ் உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த சுமார் 250 வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள வேம்பங்குடி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மகன்  வீரமணிகண்டன் பங்கேற்று 2 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். இத்துடன், மலேசியாவில் டிசம்பரில் நடைபெற உள்ள உலக சாம்பியன்சிப் சிலம்பப் போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி பெற்றுள்ளார். இவர், கன்னியாகுமரியில் தெற்கு ஆசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் தங்கப் பதக்கம் உள்பட பல்வேறு போட்டிகளில் பதக்கங்கள் பெற்றுள்ளார்.

Post a Comment

0 Comments