புதுக்கோட்டை மாவட்ட பள்ளிவாசல்கள் ரமலான் நோன்புக் கஞ்சிக்கு சலுகை விலை அரிசி பெறலாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்



ரமலான் நோன்புக் கஞ்சிக்காக தமிழக அரசின் சலுகை விலை பச்சை அரிசி பெற பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினர் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நிகழாண்டு ரமலான் நோன்புக்காக புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 88 பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி தயாரிக்க 1,21,330 கிலோ அரிசி சலுகை விலையில் வழங்க ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை சலுகை விலை பச்சை அரிசி பெறாத பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் அந்தந்தப் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை அணுகி விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

Post a Comment

0 Comments