10, 11, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடுஅடுத்த ஆண்டு நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அரசு பொதுத்தேர்வுகள் தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

பிளஸ்2 தேர்வுகள் மார்ச் 2ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24-ல் வெளியாகிறது.

இதேபோல் பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 26-ம் தேதி முடிகிறது. தேர்வு முடிவுகள் மே 14ம் தேதி வெளியாகிறது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 17-ல் தொடங்கி ஏப்ரல் 9-ல் முடிகிறது. தேர்வு முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

12-ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

மார்ச் - 2: தமிழ்

மார்ச் - 5: ஆங்கிலம்

மார்ச் - 9: கணிதம், உயிரியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை தேர்வு,செவிலி

ஏப்ரல் - 12: தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிர் வேதியியல், மேம்பட்ட தமிழ் மொழி தேர்வு.

மார்ச் - 16: இயற்பியல், பொருளியல்

மார்ச்  - 20:  உயிரியல், வரலாறு, தாவிரவியல், வணிக கணிதம்

மார்ச் - 24: வேதியியல், கணக்குப்பதிவியல், தொழில்முறை கணக்குப்பதிவியல்

11-ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

மார்ச் - 4: தமிழ்

மார்ச் - 6: ஆங்கிலம்

மார்ச் - 11: கணிதம், உயிரியல், நுண்ணுயிரியல்,
ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை தேர்வு, நர்சிங் பொது

மார்ச் - 13: தொடர்பு ஆங்கிலம், நெறிமுறையியல், கணினி அறிவியல், உயிர் வேதியியல்

மார்ச் - 18: இயற்பியல், பொருளியல்

மார்ச்  - 23: உயிரியல், வரலாறு, தாவிரவியல், வணிக கணிதம்

மார்ச்  - 26: வேதியியல், கணக்குப்பதிவியல்

10-ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை


மார்ச் - 17: தமிழ் முதல் தாள்

மார்ச் - 19: தமிழ் இரண்டாம் தாள்

மார்ச் - 21: விருப்பமொழி தேர்வு

மார்ச் - 27: ஆங்கிலம் முதல் தாள்

மார்ச் - 30: ஆங்கிலம் இரண்டாம் தாள்

ஏப்ரல் - 2: கணிதம்

ஏப்ரல் - 7: அறிவியல்

ஏப்ரல் - 9: சமூக அறிவியல்

Post a Comment

0 Comments