மரண அறிவித்தல்:- அவுலியாநகர் 4-வது வீதியை சேர்ந்த முஹம்மது ராவுத்தர் அவர்கள்



கோபாலபட்டிணம் அவுலியாநகர் 4-வது வீதியை (பஷீர் அப்பா வீட்டு தெரு) சேர்ந்த நாசுவவீட்டு பாத்திமா பேரனும், மஹபு நிஷா அவர்களின் மகனுமாகிய முஹம்மது ராவுத்தர் அவர்கள் இன்று (07/07/2019) நள்ளிரவு 12.15 மணியளவில்  வபாத்தாகிவிட்டார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

சகோதரர் ராவுத்தர் 04/07/2019 அன்று நடந்த சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்து மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (07/07/2019) சிகிச்சை பலனின்றி வபாத்தாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் ஜனாஸா கோபாலப்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கிராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கிராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு'கிராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.


''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

Post a Comment

0 Comments