புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டா மாறுதல் தொடர்பான சிறப்பு முகாம்.. விவசாயிகள் பயன் பெற அழைப்பு!!!



புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியுதவி பெற
அனைத்து வட்டங்களிலும் விண்ணப்பம் மற்றும் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் 01.08.2019 அன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு, ஊரக வளர்ச்சித்துறையின் பிரதம மந்திரியின் ஆவாஸ்யோஜனா திட்டத்தின் கீழும், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் மூலமும், வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மனுதாரர்கள், பயனாளிகள் பெயரில், பட்டா இல்லாததால் மேற்கண்ட திட்டங்களில் பயனடைய இயலாத நிலை உள்ளது.

மேற்கண்ட திட்டங்களில் பயனடைய ஏதுவாக மனுதாரரர்கள், பயனாளிகள் தங்கள் பெயரில் பட்டா இல்லாத நபர்கள் வரும் 1-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ள குறுவட்ட அளவில் தாசில்தார், துணை தாசில்தார்கள் தலைமையில், பட்டா மாறுதல் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேற்படி முகாமில் விவசாயிகள் தங்களின் பட்டா மாறுதல் மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலர்களை சந்தித்து நேரில் வழங்கலாம்.

இம்மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 10 தினங்களுக்குள் முடிவு செய்து, ஆணைகள் பிறப்பிக்கப்படும். மேலும் விவசாயிகள் தங்களது நிலத்திற்கான பட்டா அவர்களது தாய் அல்லது தந்தை பெயரில் இருக்கும் பட்சத்தில் வாரிசு அடிப்படையிலும், பட்டா மாறுதல் செய்து கொள்ள பட்டா மாறுதல் செய்யகோரும் புலத்திற்கான கிரய ஆவணங்கள் மற்றும் வாரிசு குறித்த ஆவணங்கள், ஆதார் அட்டை நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், குடும்ப அட்டை நகல், மொபைல் எண் ஆகிய ஆவணங்களுடன் மேற்படி முகாமில் மனுக்கள் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments