புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தொழிலாளியின் வயிற்றில் இருந்த 5 கிலோ புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. நோயாளி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நெம்மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் உடையார்.
தொழிலாளியான இவர் வயிற்றுவலி காரணமாகவும், வயிறு வீக்கம் காரணமாக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்போது வயிறு பெரிய அளவில் வீக்கம் காணப்பட்டதால், அவருக்கு சி.டி.ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் அவருக்கு வயிற்றில் புற்றுநோய் கட்டி இருக்காலம் என முடிவு செய்யப்பட்டு, கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் பாரதிராஜா, சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் லதா, மயக்க மருந்து நிபுணர் சரவணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அறுசை சிகிச்சை செய்தனர். அப்போது குடல் வால் நுனியில் இருந்த 5 கிலோ எடை கொண்ட புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. மேலும் கட்டியை சுற்றி புற்றுநோய் பரவி இருந்த பகுதிகளும் அகற்றப்பட்டன.
தற்போது உடையார் நலமுடன் உள்ளார். இன்னும் 3 நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து மருத்துவ கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், குடலில் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் புற்றுநோய் ஏற்படலாம். உடையாருக்கு குடல்வால் பகுதியில் புற்றுநோய் கட்டி ஏற்பட்டு உள்ளது. 5 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றுவது என்பது மிகவும் சவாலானது. இந்த அறுவை சிகிச்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் ஒரு மாதம் தங்க வைக்கப்பட்டு இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் வரை செலவாகும் என்றார்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.