புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விலையில்லா கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள் பெற விண்ணப்பிக்கலாம்!!!



புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் தமிழக அரசின் விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் பெற தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டிற்கு விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. கறவைப் பசுகள் வழங்க சித்தன்னவாசல், கோதண்டராமபுரம், வன்னியம்பட்டி, இரும்பாநாடு, மஞ்சக்குடி, கட்டுமாவடி, பாத்தம்பட்டி மற்றும் காயாம்பட்டி ஆகிய 8 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

வெள்ளாடுகள் வழங்க கோத்திராப்பட்டி, ஏகபெருமகளூர், கன்னங்காரகுடி, மங்கனூர், குளந்திராபட்டு, நாஞ்சூர், கொன்னைப்பட்டி, மணவிடுதி, லெம்பலக்குடி, குமாரமங்கலம், கம்மங்காடு, கும்மங்குடி, மழையூர், ஒடுகம்பட்டி, மங்களத்துப்பட்டி, குன்னத்தூர், கட்டக்குடி, கொடிவயல், லெட்சுமணன்பட்டி, குடுமியான்மலை, கோங்குடி, மதியாணிபட்டி, குளத்தூர், மண்டையூர், குரும்பூர், மருதம்பட்டி, மங்களநாடு, மணவேளாம்பட்டி, மாங்குடி, மதகம், பெருநாவலூர், முதுகுளம் மற்றும் மாங்கோட்டை  ஆகிய 33 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியல் கிராம சபைக் கூட்டங்களில் இறுதி செய்யப்படவுள்ளது. எனவே, அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், நிலமற்ற விவசாயிகள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் அரசு கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பிக்கலாம். 

Post a Comment

0 Comments