புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் கட்டுமாவடி PMS திருமண மண்டபத்தில் நேற்று 03/08/2019 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா தலைமையில் நடைபெற்றது.
ரியாத் மண்டல இஸ்லாமிய அழைப்பாளர் அரசை அலி உஸ்மான் கிராத் ஓதி துவங்கி வைத்தார்.
கூட்டத்தில் மாநில மீனவர் அணி செயலாளர் ஜெகதை செய்யது, சவுதி ரியாத் மண்டல தலைவர் நூர் முகம்மது, மாநில செயற்குழு உறுப்பினர் திருச்சி உதுமான் அலி, தலைமை கழக பேச்சாளர் திருச்சி சரிப், ரியாத் மண்டல இஸ்லாமிய அழைப்பாளர் அரசை அலி உஸ்மான், மாவட்ட பொறுப்பு தலைவர் நவாஸ் கான், தமுமுக மாவட்ட செயலாளர் க்ரீன் முகம்மது, மமக மாவட்ட செயலாளர் அபுசாலிகு, மாவட்ட பொருளாளர் ஜகுபர் அலி , மாவட்ட துணை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிதாக மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது:
தீர்மானம் 1) தீர்மானங்கள்: NIA இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக தொடர் கைதுகளையும், பொய் வழக்குகளையும் புனைந்து வரும் NIA விற்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டிக்கின்றோம்.
தீர்மானம் 2) இந்திய அரசியலமைப்பு சட்டம் இஸ்லாமியர்களுக்கு வழங்கி உள்ள முஸ்லீம் தனியார் சட்ட உரிமை பாதிக்கும் வகையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்றி இருக்கும் மத்திய அரசை கண்டிக்கின்றோம்.
தீர்மானம் 3) மாட்டின் பெயரால் தொடர் படுகொலைகளையும், ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல சொல்லி தப்ரெஷ் அன்சாரி, காலித் அன்சாரி போன்றவர்களை அடித்தும், எரித்தும் படுகொலை செய்த RSS பயங்கரவாத சங்பரிவார அமைப்பை சார்ந்த நபர்களுக்கு உச்சபட்ச தண்டணை வழங்கி மேலும் இது போன்ற வகையில் நடைபெறும் படுகொலைகளை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
கூட்டத்தின் இறுதியில் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் MSK சாலிகு நன்றி கூறினார்.
தகவல்
தமுமுக ஊடக பிரிவு
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
கோபாலப்பட்டினத்தை சேர்ந்த தமுமுக மமக மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகளும் பொதுக்குழுவில் கலந்து கொண்டனர்.
தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : சேக் அஜ்மல் கான்

தமுமுக & மமக மாவட்ட தலைவராக அபுசாலிகு அவர்களும்,
தமுமுக மாவட்ட செயலாளராக ஜகுபர் அலி அவர்களும்,
மமக மாவட்ட செயலாளராக கிரீன் முகமது அவர்களும்,
தமுமுக &மமக மாவட்ட பொருளாளராக அஜ்மல் கான் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானம் 1) தீர்மானங்கள்: NIA இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக தொடர் கைதுகளையும், பொய் வழக்குகளையும் புனைந்து வரும் NIA விற்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டிக்கின்றோம்.
தீர்மானம் 2) இந்திய அரசியலமைப்பு சட்டம் இஸ்லாமியர்களுக்கு வழங்கி உள்ள முஸ்லீம் தனியார் சட்ட உரிமை பாதிக்கும் வகையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்றி இருக்கும் மத்திய அரசை கண்டிக்கின்றோம்.
தீர்மானம் 3) மாட்டின் பெயரால் தொடர் படுகொலைகளையும், ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல சொல்லி தப்ரெஷ் அன்சாரி, காலித் அன்சாரி போன்றவர்களை அடித்தும், எரித்தும் படுகொலை செய்த RSS பயங்கரவாத சங்பரிவார அமைப்பை சார்ந்த நபர்களுக்கு உச்சபட்ச தண்டணை வழங்கி மேலும் இது போன்ற வகையில் நடைபெறும் படுகொலைகளை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
கூட்டத்தின் இறுதியில் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் MSK சாலிகு நன்றி கூறினார்.
தகவல்
தமுமுக ஊடக பிரிவு
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
கோபாலப்பட்டினத்தை சேர்ந்த தமுமுக மமக மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகளும் பொதுக்குழுவில் கலந்து கொண்டனர்.
தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : சேக் அஜ்மல் கான்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.