தொண்டி பகுதியில் கடல் உள்வாங்கியது: சுனாமி வந்துவிடுமோ என மக்கள் அச்சம்!!!



திருவாடானை அருகே தொண்டி பகுதியில் வெள்ளிக்கிழமை  கடல் உள்வாங்கியதால், கரையோர மக்கள் அச்சம் அடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, எம்.ஆர்.பட்டினம், முள்ளிமுனை, காரங்காடு, புதுபட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி அளவில் வழக்கத்துக்கு மாறாக, சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு கடல் உள்வாங்கியது.  இதனால், கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தரை தட்டி நின்றன. ஒரு மணி நேரம் கழித்து கடல் பழைய நிலைக்குத் திரும்பியது.

சுனாமி வந்துவிடுமோ என அச்சமடைந்த அப்பகுதி மீனவ மக்கள் கூறியதாவது:

இந்த நிலை கடந்த 3 நாள்களாக நீடிக்கிறது. திடீரென காலை 9 மணிக்கு கடல் உள்வாங்குவதும், நண்பகல் 12 மணிக்குப் பிறகு சகஜ நிலைக்குத் திரும்புவதுமாக உள்ளது. ஆனால், வெள்ளிக்கிழமை கடல் அதிக தொலைவுக்கு உள்வாங்கியது என்றாலும், பழைய நிலைக்குத் திரும்பிவிட்டது என்றனர்.

Post a Comment

0 Comments