பொன்னமராவதி பகுதிகளில் ஒரேநாளில் 3 பள்ளிவாசல்களில் மின்சாதன பொருட்கள் திருட்டு



பொன்னமராவதி பகுதிகளில் உள்ள மூன்று பள்ளிவாசல்களில் ஒரே நாளில் மின்சாதன பொருட்கள் மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருக்களம்பூரில் உள்ள பள்ளிவாசலில் உள்ள ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு ஆம்பிளிபயர், வேந்தன்பட்டியில் உள்ள பள்ளிவாசலில் ரூ.ஏழாயிரம் மதிப்புள்ள ஆம்பிளிபயர், பொன்னமராவதி பெருமாள் கோவில் வீதியில் உள்ள பள்ளிவாசலில் 11 பித்தளை தண்ணீர் பைப் என ஒரே நாளில் மூன்று பள்ளிவாசல்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இது தொடர்பாக பொன்னமராவதி போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இதே போல் இரண்டு மாதங்களுக்கு முன் பொன்னமராவதி அருகே உள்ள சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மருதிபட்டி, செல்லியம்பட்டி, கீழச்சிவல்பட்டி உள்ளிட்ட ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களின் ஆம்பிபயர் திருட்டு போயுள்ளன. இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட போலீசார் கூறுகையில்- திருடிய நபர் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்ட ஒரே வாலிபர் என தெரியவந்துள்ளது. அடையாளம் தெரியாத அந்த வாலிபரை தேடி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments