புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுக்கு 60 பேர் அனுமதி



மர்ம காய்ச்சலுக்கு 60 பேர் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் உற்பத்தியாகக் கூடியவை. 3 வாரங்கள் மட்டுமே உயிர்வாழும் இந்தக் கொசுக்கள் நூற்றுக்கணக்கான முட்டைகளை இட்டு இனப்பெருக்கம் செய்கிறது.  இந்தக் கொசுக்கள் பகலில் கடிக்கும். டயா், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்ட காலமாக கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கும் இக்கொசுக்கள் முட்டை இடுகின்றன.

சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, எலும்பு வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும். ரத்தம் உறைவதற்கு முக்கிய காரணியாக விளங்கும் ரத்தத் தட்டணுக்களை டெங்கு வைரஸ் அழித்து விடும் தன்மை கொண்டது.

ரத்தத் தட்டணுக்கள் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும், ஈறு, சிறுநீா் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக் கூடும். உரிய மருத்துவ சிகிச்சை பெறவில்லை என்றால் உயிர் இழப்பு நேரிடலாம். சாதாரணமாக ஏற்படும் சளி, காய்ச்சல் தானாக ஓரிரு நாட்களில் குணமாகிவிடும். ஆனால் மலேரியா, எலிக் காய்ச்சல், டைஃபாய்டு காய்ச்சல் மற்றும் டெங்கு ஆகியவற்றுக்கு உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.  மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். டெங்குக் காய்ச்சலைக் குணப்படுத்தவும், தடுக்கவும் நிலவேம்புக் குடிநீா் மற்றும் பப்பாளி இலைச்சாறு ஆகிய சித்த மருந்துகளைப் பயன்படுத்தலாம். காய்ச்சல் பாதிப்புகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாக கேட்டுக்கொண்டிருந்தது.

இந்நிலையில், டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 4 பேரும், மர்ம காய்ச்சலுக்கு 60 பேரும் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments