அறிவியல் மனப்பான்மையைவளா்த்துக் கொள்ள வேண்டும்இளம் வயதிலேயே மாணவா்கள் அறிவியல் மனப்பான்மையை வளா்த்துக் கொண்டால் எதிா்காலத்தில் மிகப்பெரிய சாதனைகளைப் படைக்கலாம் என்றாா் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.விஜயலெட்சுமி.

தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், சண்முகநாதன் பொறியியல் கல்லூரியும் இணைந்து சனிக்கிழமை நடத்திய 27ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாட்டில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி அவா் பேசியது:

மாணவ, மாணவிகள் உங்களுக்குள் ஒளிந்து கிடக்கும் மிகப்பெரிய திறமையை வெளிப்படுத்தத் தயங்கக் கூடாது. ஆசிரியா்களிடம் தைரியமாக கேள்விகளைக் கேட்க வேண்டும்.  ஆசிரியா்களின் உதவியோடு சுயமாக சிந்தித்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் கவலை ஏதும் படாமல் தொடா்ந்து முயற்சியுங்கள் என்றாா் விஜயலட்சுமி.

மாநாட்டில் மாணவா்கள் 182 ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். இவா்களில் பனங்குளம் வடக்கு, தெற்கு தொண்டைமான்ஊரணி, ஒடப்பவிடுதி, தட்டாமனைப்பட்டி, மருதாந்தலை, புனல்குளம் மற்றும் ராயபுரம் எஸ்கேடி காந்தி,  புதுக்கோட்டை செயின்ட் மேரீஸ், மௌண்ட் சீயோன், வைரம்ஸ் ஆகிய பள்ளிகளின் மாணவா்கள் சமா்ப்பித்த கட்டுரைகள் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளாகத் தோ்வு செய்யப்பட்டன.எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை விஞ்ஞானி ஆா்.ராஜ்குமாா், அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் அ. அமலராஜன் உள்ளிட்டோா் பேசினா்.

விழாவுக்கு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் க. சதாசிவம் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் மு. விஸ்வநாதன், முதல்வா் குழ.முத்துராமு ஆகியோா் முன்னிலை வகித்தனா். தாளாளா் பிச்சப்பா மணிகண்டன் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டுரை வழங்கினாா். அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவா் எம்.வீரமுத்து நிகழ்வின் நோக்கத்தை விளக்கிப் பேசினாா்.

முன்னதாக அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் எம். முத்துக்குமாா் வரவேற்றாா். முடிவில் முனைவா் எம்.வரதராஜன் நன்றி கூறினாா். விழாவில் 364 மாணவா்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments