சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்ன அமைச்சர்..!



நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் 48 நாட்கள் நடைபெறும் யானைகள் முகாமை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.


இந்நிலையில் யானைகள் முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் சீனிவாசன் நடந்து சென்ற போது, அவரது செருப்பு மாட்டிக்கொண்டது.

புல்வெளியில் மாட்டிக்கொண்ட தனது செருப்பை ஒரு சிறுவனை ‘டேய் வாடா வாடா, செருப்பை கழற்றுடா’ என கூறியதும் அருகிலிருந்த சிறுவன் அவரது செருப்பை அகற்றினான். சம்பவம் நடந்த போது அமைச்சருடன் அருகில் நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, அதிகாரிகள் உடனிருந்தனர்.

அமைச்சரின் இந்த செயல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments