கொரானா பரவலை கருத்தில் கொண்டு நாட்டின் நலன் கருதி, இஸ்லாமிய அமைப்புகளும் மற்றும் ஜமாஅத்துல் உலமா சபையும் வைத்த கோரிக்கையையும் ஏற்று கோபாலப்பட்டிணம் ஷாகின்பாக் போராட்ட களம் தற்காலிகமாக கொரானா வைரஸ் விழிப்புணர்வு மருத்துவ முகமாக மாற்றியமைக்கப்படுகிறது.
கோபாலப்பட்டிணம் ஷாகின்பாக் போராட்டம் கடந்த 1-ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை (18 நாட்களாக) பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இரவு பகல் பாராமல் தொடர் இருப்பு போராட்டமாக நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு CAA,NRC,NPR-ஐ திரும்பப் பெறவேண்டும், தமிழக அரசு அவற்றை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் இருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு நம்முடைய போராட்டங்களுக்கு மதிப்பளிக்காமலும், செவி சாய்க்காமலும் காலம் தாழ்த்தி வருகிறது. அதனால் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தினை வீரியமாக முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.
ஆயினும் உலகெங்கிலும் தற்சமயம் பரவி வரும் கொரானா நோய் தொற்று தற்பொழுது இந்தியாவையும் வெகுவாக தாக்க தொடங்கியுள்ளது.
இந்த அசாதாரண சூழலையும் நாட்டின் நன்மையையும் கருத்தில் கொண்டு நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையில் CAA,NRC,NPR-க்கு எதிரான தொடர் இருப்பு போராட்டத்தினை தற்காலிகமாக மாற்றி அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக முடிவு தான் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே எதிர்வரும் காலத்தில் மாநில அரசு இந்த கருப்பு சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரை வீரியமாக போராட்டத்தினை முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த போராட்ட களமானது சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் களமாக மாற்றி அமைக்கப்படுகிறது.
இது நாள் வரை போராட்ட களத்தில் வீரியமுடன் முன்னின்ற பெண்கள், ஆண்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் அனைவருக்கும் போராட்ட குழு நன்றியினை தெரிவித்து கொள்கிறது.
இவண்
ஒருங்கிணைப்பு குழு
கோபாலப்பட்டிணம் ஷாகின்பாக்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.