பெரியகுளம் ஷாகின்பாக் தொடரும்..! போராட்ட குழு அறிவிப்பு..!தமிழகத்தில் ஷாஹின்பாக் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது.


அந்தவகையில் பெரியகுளம் பகுதியில் கடந்த 35 நாட்களாக நடைபெற்று வரும் ஷாகின் பாக் போராட்டம் தற்போது அனைத்து இஸ்லாமிய தலைவர்களின் கோரிக்கை ஏற்று போராட்ட குழு சார்பாக நேற்று மதியம் லுஹர் தொழுக்கைக்கு பிறகு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து முடிவில் ஷாகின் பாக் போராட்டத்தை கைவிட முடியாது எனவும் தொடர்ந்து நடைபெறும் எனவும் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரையில் நாங்கள் போராட்டத்தை வீரியமுடன் நடத்தபோகின்றோம் என போராட்ட குழு அறிவித்துள்ளார்கள்.

மேலும் கூறுகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஷாஹின் பாக் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டாலும் அல்லாஹ்வின் உதவியை கொண்டு பெரியகுளம் ஷாஹின் பாக் தொடர்ந்து நடைபெறும் எனவும் இந்தியாவிலே டெல்லி ஷாஹின் பாக்கிற்கு அடுத்த படியாக தமிழ்நாட்டில் உள்ள பெரியகுளத்தில் தான் ஷாஹின் பாக்கை ஆரம்பித்தோம் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே,

கடுமையான அடக்குமுறைக்கு மத்தியில் இறைவனை மட்டுமே முன்னிறுத்தி பெரியகுளம் ஷாஹின் பாக்கை ஆரம்பித்தோம்.. ஆகையால் இந்த ஜனநாயக போராட்டம் வெற்றியடைய அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் என கேட்டுக்கொண்டனர்.

தகவல்: Periyakulam Shaheen bagh
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments