Breaking: தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை சுய ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு.!



தமிழகத்தில் நாளை(திங்கட்கிழமை) காலை 5 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில்  கரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 332  ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே , இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. இதனால் அனைத்து போக்குவரத்து சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த ஊரடங்கு தமிழகத்தில் நாளை(திங்கட்கிழமை) காலை 5 மணி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments