தொண்டியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து SBI வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுக்க திரண்ட மக்கள்..! (படங்கள்)இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து நேற்று 18-வது நாளாக தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அடுத்த கட்ட போராட்டமாக போராட்டகாரர்கள் வங்கியில் பணம் எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


குடியுரிமையே கேள்விக்குறி ஆக்கப்பட்ட நிலையில் இருப்பதால், வங்கிகளும் திவால் ஆகி கொண்டிருப்பதால் மக்களின் பணத்திற்கு நிச்சயம் பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்தும், தங்கள் பணத்தை வைத்துதான் வங்கிகள் இயங்குகிறது, அந்த பணத்தை வங்கியில் இருப்பு வைக்காமல் தவிர்த்துவிட்டால் அரசாங்கத்திற்கு பொருளாதார ரீதியான நெருக்கடியை ஏற்படுத்துவதன் மூலம் இந்த சட்டத்தை திரும்பப்பெற வைக்க முடியும் என்பதை உணர்ந்தும் நேற்று 13.03.2020 தொண்டி மக்கள் வங்கிகளில் இருப்பு வைத்திருந்த பணத்தை முற்றிலுமாக எடுத்து அதன் மூலம் அரசாங்கத்திற்கு அவர்களின் எதிரப்பை பதிவு செய்தார்கள்.


இதே போன்று அனைத்து ஊர்களிலும் செய்ய வேண்டும் என்று தொண்டி மக்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

நேற்றைய தினம் 13.03.2020 கோபாலப்பட்டிணம் ஷாஹின் பாக் தொடர் இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் மீமிசல் SBI வங்கியில் தங்கள் இருப்பு தொகையை எடுக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments