கொரோனா பாதிப்பு: சவுதி அரேபியாவில் காலவரையின்றி ஊரடங்கு நீடிப்பு.!சவுதி அரேபியாவில் காலவரையின்றி ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு மன்னர் சல்மான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


சவுதி அரேபியாயவில் கடந்த 4 நாள்களில் சுமார் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு மறுஅறிவிப்பு வரும் வரை கால வரையின்றி நீட்டிக்கப்படுவதாக சவுதி மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.

கடந்த வாரம் தலைநகர் ரியாத் உள்ளிட்ட பெரிய நகரங்களில் 24 மணி நேரமும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மற்ற பகுதிகளில், மார்ச் 23 முதல் (மாலை 3 மணி - காலை 6 மணி) ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. 3கோடி மக்கள் தொகை கொண்ட அங்கு 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4,033 நோய்த் தொற்றுகள் பதிவாகியுள்ளன. வளைகுடா நாடுகளில் சவுதியில்தான் பாதிப்பு அதிகம் உள்ளது 

 சர்வதேச விமான சேவை நிறுத்தி வைக்கpபட்டு உள்ளது. ஆண்டு முழுவதும் உம்ரா யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, பெரும்பாலான பொது இடங்களை மூடியுள்ளது. மற்ற வளைகுடா நாடுகளும் இதே போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. சவூதி அரேபியாவின் 13 பிராந்தியங்களில் உள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அப்படியே உள்ளன என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் மொத்தம் 13200 கொரோனா பாதிப்புகளும் 88 உயிர் இழப்புகளும் பதிவாகி உள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments