கோபாலப்பட்டிணத்தை சூழ்ந்த கருமேக கூட்டங்கள்.! (படங்கள்)



தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சியால் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திரம் வெயில் அடித்துவருகிறது, பல இடங்களில் 100°F தாண்டி வெயில் அடித்து வருகிறது.


இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக கோபாலப்பட்டிணம், மீமிசல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 28-05-2020 மாலை செவ்வாய்க்கிழமை கடும் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. கரோனா தொற்று பாதிப்பு  வெப்பம் அதிகரித்து வாட்டியதால் வீடுகளில் இருந்து வெளியில் வருவதை மக்கள் தவிா்த்தனா். வெப்பம் காரணமாக இரவு நேரங்களிலும் காற்றோட்டம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனா்.  ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கிய மக்கள், வெப்பத்தின் தாக்கம் தாங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அவ்வப்போது அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். வெயில் தாக்கம் தாங்க முடியாமல் பலருக்கு கண்கட்டி, போன்ற வலிகள் ஏற்பட்டது. 


இதனிடையே காலை நேரத்தில் வெளுத்து வாங்கிய வெயில் மாலை நேரத்தில் மக்களுக்கு குளிர்ச்சியாக கோபாலப்பட்டிணம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை கடும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது, மழை பெய்யமால். 


பிறகு 5.00 மணி முதல் 6.00 மணி வரை மழை லேசாக விட்டு விட்டு பெய்தது, மழையால் கோபாலப்பட்டிணம் முக்கிய சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. 

மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியதால் கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.


தொடர்ச்சியாக வெயில் வாட்டி வந்த நிலையில், வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் ஊரடங்கால் முடங்கி கிடந்த பொதுமக்கள், பள்ளி குழந்தைகள், சிறியவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் . மேலும் அனைவரும் தங்களது மொபைலில் புகைப்படங்களை எடுத்து  வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.








கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments