அறந்தாங்கி அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து: லாரி மற்றும் 40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்.!புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாயக்கர்பட்டியில் நூர்முகமது என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் தொழிற்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகிறது.


144 தடை உத்தரவு நீடிக்கும் நிலையில் தளர்வின் காரணமாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக 100-க்கும் மேற்பட்டோர் பணியாளர்களுடன் இயங்கி வந்தது.

இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென்று மின்கசிவு ஏற்பட்டு தேங்காய் மட்டை மற்றும் தேங்காய் நார் மஞ்சுகளில் தீ மளமளவென்று பற்றி எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் அருகில் தேங்காய் மஞ்சு ஏற்றி நின்று கொண்டிருந்த லாரியும் எரியத் தொடங்கியது.


தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி மற்றும் ஆவுடையார்கோயில் தீயணைப்புத் துறையினர் குடிதண்ணீர் வாகனங்கள் இணைந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி மளமளவென்று பற்றிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இதில் லாரி, நார் தொழிற்சாலை, தேங்காய் நார் பிரித்தெடுக்கும் இயந்திரம் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட 40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.


திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு மேலாக தொழிற்சாலை மூடியிருந்திருந்த நிலையில் கடந்த 10 நாட்களாக தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கருதி தேங்காய் நார் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. 

மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து பற்றி அறந்தாங்கி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments