நெடுவாசலில் வெளிமாநில வெட்டுக்கிளியா.? அதிகாரிகள் ஆய்வு.!



வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்து சில மணி நேரங்களில் வயல்களில் உள்ள பயிர்களை நாசம் செய்தன.


இந்நிலையில் நேற்று நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் ஒரு வெட்டுக்கிளியை பார்த்து விவசாயிகள் அச்சப்பட்டனர். இதையறிந்த கீரமங்கலம் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் பெரியசாமி உள்ளிட்ட அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அந்த பகுதியில் ஒரு வெட்டுக்கிளி மட்டுமே காணப்பட்டது. வேறு வெட்டுக்கிளிகள் காணப்படவில்லை. 

இதையடுத்து அதிகாரிகள் விவசாயிகளிடம், கீரமங்கலம் பகுதியில் வழக்கமாக காணப்படுகிற வெட்டுக்கிளி தான் நெடுவாசலில் காணப்பட்டது. இதனால் எந்த பாதிப்பும் வராது, என்றனர்.




கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments