கோட்டைப்பட்டினத்தில் தமுமுக, முஸ்லிம் ஜமாஅத் (வக்ஃப்) மற்றும் மணமேல்குடி அரசு மருத்துவமனை சார்பில் கபசுர குடிநீர் வழங்கல் .!கோட்டைப்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மாவட்ட மருத்துவ சேவை அணி, கோட்டைப்பட்டினம் முஸ்லிம் ஜமாஅத் (வக்ஃப்), மணமேல்குடி அரசு மருத்துவமனை (சித்தா பிரிவு) இணைந்து நடத்திய கபசுர குடிநீர் நிகழ்ச்சி கோட்டைப்பட்டினம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நேற்று 25.07.2020 நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் MSK. சாலிகு அவர்கள் தலைமை ஏற்றார். கபசுர குடிநீரை தமுமுக மாவட்ட தலைவர் A. அபுசாலிகு அவர்கள் துவங்கி வைத்தார்கள். முஸ்லிம் ஜமாஅத் துணை தலைவர் ஹோஜா பகுருதீன், ஜிம் சரீப் அப்துல்லா, மற்றும் முஸ்லிம் ஜமாஅத் செயலாளர் A. சரீப் அப்துல்லா(கீனா), மீனவர் காலனி கலந்தர் மரைக்காயர், மமக ஒன்றிய செயலாளர் கலந்தர் மரைக்காயர், தமுமுக கிளை தலைவர் ஹாஜா முகைதீன்(கு-மி), கிளை செயலாளர் ஹாஜா முகைதீன்(செட்டி),  மற்றும் தமுமுக நிர்வாகிகள், ஜமாஅத் உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள்கள் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து கபசுர குடிநீரை வாங்கி பயனடைந்தனர்.


தகவல்:
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், 
மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட மருத்துவ அணி,
கோட்டைப்பட்டினம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments