புதுக்கோட்டை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அலுவலகத்தை மூதாட்டி அவர்களின் கரங்களால் திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை தெற்கு 4ம் வீதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி புதுக்கோட்டை மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.  குடும்பத்தால் கைவிடப்பட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் 90 வயது நிரம்பிய அம்மையார் வேதம் அவர்களின் கரங்களால்  திறந்து வைத்தார். இந்த அலுவலகம் 2வது மாடியில் உள்ளது.  புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது, 90 வயது நிரம்பிய வேதம் அம்மையாரை கிழ் தளத்திலிருந்து 2வது மாடி வரை தூக்கிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வாழ்த்தினார்.  கட்சி அலுவலக திறப்பு விழாவில் அக்கட்சியின் மாவட்ட கழக செயலாளர் நியாஸ் அகமது, மாவட்ட திமுக துணைச் செயலாளர் க.மதியழகன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ்ராஜா, திமுக நகர கழக செயலாளர் நைனா முகமது, மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் முல்லை முபாரக் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள்  உடனிருந்தனர்.

திறப்பு விழாவின் முடிவில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  மாவட்ட செயலாளர்  நியாஸ் அகமது தலைமையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் மாவட்ட நகர நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். 


  

Post a comment

0 Comments