புதுக்கோட்டையில் ஆப்பிள் பழம் வரத்து அதிகரிப்பு... கிலோ ரூ.100-க்கு விற்பனை.!!புதுக்கோட்டைக்கு ஆப்பிள் பழம் வரத்து அதிகரித்துள்ளது. கிலோ ரூ.100-க்கு விற்பனையானது.

புதுக்கோட்டையில் பழக்கடைகளுக்கு மொத்த வியாபாரிகள் சிலர் பழங்களை மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். சில்லரை வியாபாரிகள் திருச்சி, மதுரை, திண்டுக்கல் உள்பட வெளிமாநிலங்களில் உள்ள பெரிய மார்க்கெட்டுகளில் இருந்து பழங்களை விலைக்கு வாங்கிவந்தும், ஆர்டரின் பேரில் வரவழைத்தும் விற்கின்றனர். 

இந்த நிலையில் தற்போது இந்திய ஆப்பிள் வரத்து அதிகமாக உள்ளன. பெரும்பாலான பழக்கடைகளில் ஆப்பிள் பழம் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. புதுக்கோட்டையில் ஒரு கடையில் 1 கிலோ ஆப்பிள் ரூ.100-க்கு விற்பனையானது. சில்லரை கடைகளில் இவற்றின் விலையை விட சற்று கூடுதலாக விற்கப்படுகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து இந்த ஆப்பிள் பழம் வரத்து காணப்படுவதாக வியாபாரி கூறினார்.

புதுக்கோட்டையில் ஒரு பழக்கடையில் விற்பனையான பழங்களின் சிலவற்றின் விலை விவரம் கிலோ கணக்கில் வருமாறு:- ஆரஞ்சு ரூ.60-க்கும், சாத்துக்குடி ரூ.50-க்கும், மாதுளம் ரூ.100-க்கும், பச்சை திராட்சை ரூ.80-க்கும், பன்னீர் திராட்சை ரூ.70-க்கும், சீத்தாப்பழம், கொய்யா பழம் தலா ரூ.50-க்கும், பப்பாளி ரூ.30-க்கும் விற்பனையானது. பழ விற்பனை குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், “தற்போது ஆப்பிள், ஆரஞ்சு, சீத்தா ஆகிய பழங்களின் சீசனாகும். 

இவற்றின் வரத்து தற்போது அதிகமாக உள்ளன. விலையும் சராசரியாக இருப்பதால் விற்பனையும் அதிகமாக நடந்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உடல் ஆரோக்கியத்திற்காக பழ வகைகளை பொதுமக்கள் அதிகம் வாங்கி விரும்பி சாப்பிடுகின்றனர். ஆப்பிள் பழம் முன்பு ரூ.150 முதல் ரூ.170 வரைக்கும் விற்பனையானது. வரத்து அதிகரிப்பால் அதன் விலை சற்று குறைந்துள்ளது” என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a comment

0 Comments