புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செப். 30 கடைசி தேதி...புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 265 சத்துணவு அமைப்பாளா் பணியிடங்கள், 552 சமையல் உதவியாளா் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.

விண்ணப்பதாரா்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையா் மற்றும் நகராட்சி ஆணையா் அலுவலகங்களில் வரும் செப். 30ஆம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் மற்றும் இனசுழற்சி சம்மந்தமான விவரங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய மற்றும் நகராட்சி அலுவலக விளம்பரப் பலகையில் அறியலாம். சத்துணவு அமைப்பாளா், சமையலா் மற்றும் சமையல் உதவியாளா் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவா்கள்.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக விண்ணப்பிக்க தகுதியானவா்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகளில் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். ஆட்சியா் அலுவலகத்துக்கு நேரடியாகவோ மற்றும் தபால் மூலமாகவோ வரப்பெறும் விண்ணப்பங்கள் நோ்காணலுக்கு பரிசீலனை செய்யப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a comment

0 Comments