புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டத்தில் இந்தி மொழியா.? விவசாயிகள் அதிர்ச்சி.!விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஹிந்தி மொழி இருந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தலைமையேற்று நடத்திய நிலையில் இந்த கூட்டத்தில் தமிழ் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது.

இதனைக்கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுவரை தமிழ் ஆங்கிலத்தில் மட்டுமே பேனர்கள் வைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது திடீரென ஹிந்தியிலும் பேனர் வைக்கப்பட்டு இருந்தது விவசாயிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்ததால் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஒரு விவசாயி சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியபோது ’ஆண்டாண்டு காலமாக தமிழ் ஆங்கிலத்தில் மட்டுமே குறை தீர்க்கும் கூட்டத்தில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் இன்று புதுமையாக இந்தி மொழியிலும் எழுதப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நடக்கும் விவசாய குறை தீர்க்கும் கூட்டத்தில் இந்தியில் எதற்கு எழுதப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a comment

0 Comments