ஆதனக்கோட்டை அருகே காது வரை வாய் உள்ள அதிசய கன்றுக்குட்டி.!



ஆதனக்கோட்டை அருகே உள்ள கருப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜ். இவர் வளர்த்து வந்த பசுமாடு, நேற்று முன்தினம் கன்று குட்டியை ஈன்றது. அப்போது ராமராஜ் கன்றுகுட்டியை பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார்.

கன்றுக்குட்டியின், வாயிலிருந்து காதுவரை வலதுபக்கம் முழுவதும் வாய் இருந்ததுடன் பற்களும் இருந்ததைக்கண்டு அதிசயத்து போனார். கன்றுக்குட்டியின் வாயில் உள்ள கீழ் தாடை, மேல் தாடைக்கு மாறாக கோணலாக இருந்ததுடன் வாய் மிகவும் நீளமாக இருப்பதால் தாயிடமிருந்து பால் குடிக்க மிகவும் கன்றுகுட்டி சிரமப்படுகிறது. தாயிடமிருந்து பாலை கறந்து பால் பாட்டில் மூலம் கன்றுக்குட்டிக்கு ராமராஜ் கொடுத்து வருகிறார்.

பிறவியிலேயே வாய் இப்படி இருந்தாலும் கன்றுக்குட்டியின் சிரமத்தை போக்க கால்நடை மருத்துவர்கள் இந்த கன்றுக்குட்டியின் வாய் பகுதியை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய வேண்டுமென்று ராமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கன்றுக்குட்டியை கருப்புடையான்பட்டியை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தினர் அதிசயத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments