ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு.!ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் கரூர், கீழச்சேரி, பாண்டி பத்திரம், தொண்டைமானேந்தல், வீரமங்களம் ஊராட்சிகளில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக ரூ.52 கோடியே 64 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டில் குடிநீர்த் திட்ட பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்ட பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது, ஆவுடையார்கோவில் ஒன்றியக் குழுத் தலைவர் உமாதேவி காசிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரன், அசோகன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொறியாளர்கள், ஒன்றிய பணிமேற்பார்வையாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments