நிவர் புயல் முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கையாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டியவை.!!நிவர் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்க உள்ள நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கீழ்கண்டவற்றை தயார் நிலையில் வைத்துக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1. வாகனங்களில் பெட்ரோல்/டீசல்.
2. குடிநீர் கேன்கள்.
3. தீப்பெட்டிகள்.
4. மெழுகுவர்த்திகள்.
5. கொசுவர்த்திகள்.
6. இட்லி/தோசை மாவு.
7. போதுமான அளவு மருந்துகள்.
8. குழந்தைகளின் பாதுகாப்பு உபகரணங்கள்.
9. காய்கறி/மளிகை பொருட்கள்.
10. பேட்டரி/அலைபேசி/மடிகணிணி முழு அளவு சார்ஜ்.
11. அவசர உதவி எண்கள்.
12. குடைகள்/கொசு வலைகள்.
13. ஏசி/பிரிட்ஜ்/ஹீட்டர் -OFF Position.
14. முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைக்கவும்.
15. பகல் பொழுதில் உணவை சமைத்து வைத்துக் கொள்ளவும்.
16. உலர்ந்த ஆடைகள் மற்றும் கம்பளி.
17. பூச்சிகள்/பாம்பு மற்றும் விஷக்கடிக்கு உண்டான மருந்துகள்.
18. பச்சிளங் குழந்தைகளுக்கான சளி/காய்ச்சல் மருந்துகள்.
19. ஆதார்/லைசன்ஸ்/குடும்ப அட்டை/பாஸ்போர்ட்/காப்பீடு அட்டை/EB/எரிவாயு சிலிண்டர் அட்டை/கேபிள் போன்றவற்றை நீர் புகாத Plastic Bag ல் வைத்து கொள்ளவும்.
20. குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஓரிடத்திலோ அல்லது அவர்கள் வேலைக்காக சென்ற இடத்திலோ கவனமாக இருக்க வலியுறுத்துங்கள்.
21. திருமணம்/பிறப்பு/இறப்பு போன்ற நிகழ்ச்சிகள் இருப்பின் சூழ்நிலைக்கு ஏற்றபடி சுருக்கமாக முடித்து கொள்ளவும்.
22. முக்கியமாக அரசு அறிவுரையின்படி நடந்து கொள்வது சிறந்தது.

நம் அனைவரின் பாதுகாப்பை மனதில் கொண்டு.......

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments