ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு



ஆவுடையார்கோவில் வட்டார வள மையத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்த்தலும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகைகளை பெற்றுத் தருவதும் இக்கணக்கெடுப்பின் நோக்கமாகும். இந்த கணக்கெடுப்பு பணியை மாவட்ட கல்வி அலுவலர் திராவிட செல்வன், கல்வி மாவட்ட ஆய்வாளர் செல்வம் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

இதுவரை 15 குடியிருப்புகளில் இக்கணக்கெடுப்பு பணியானது நடைபெற்றுள்ளது. இந்த பணி வருகிற 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பணியில் வட்டார மேற்பார்வையாளர் அனிதா, ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments