கோபாலப்பட்டிணத்தில் பைத்துல்மாலின் புதிய அலுவலகம் திறப்பு..!
கோபாலப்பட்டிணத்தில் இயங்கி வரும் GPM பைத்துல்மால் நமதூர் மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகின்றது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சி மீமிசல்  அருகே உள்ள கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணத்தில் பைத்துல்மாலின்  புதிய அலுவலகம் பெரிய பள்ளிவாசல் ரேசன்கடை அருகில்  20-12-2020  ஞாயிற்றுக்கிழமை இன்று ஃபஜ்ருக்கு பின் திறக்கப்பட்டது.
 
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில்  கோபாலப்பட்டிணம் பைத்துல்மாலின் தலைவர் ஹாஜி M.பாவா மரைக்காயர் தலைமை வகித்தார்.
பைத்துல்மாலின் கெளரவ தலைவர் ஹாஜி வரிசைமுஹம்மது அலுவலக  கட்டிடத்தை  திறந்து  வைத்தார். பைத்துல்மால் உறுப்பினர்கள், மற்றும் தற்காலிக ஜமாத் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இனி பைதுல்மாலில் வட்டியில்லா கடன் பெறவும் பைத்துல்மால் தொடர்பாக அனைத்திற்கும் பைத்துல்மால்  அலுவகத்தை தொடர்பு கொண்டு உங்கள்  உதவிகளை  பெற்றுக்கொள்ளவும்.தொடர்புக்கு.. 
பைத்துல்மாலின் பொருளாளர் ஹாஜி. முஹமது காசிம் 
📞..9787003530

தகவல் :
GPM பைத்துல்மால் கோபாலப்பட்டிணம். 
புதுக்கோட்டை மாவட்டம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments