கறம்பக்குடியில் பேரூராட்சி குப்பை கிடங்கு காய்கறி தோட்டமாக மாற்றம்.!!கறம்பக்குடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் தினமும் 1½ டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பைகள் திருமணஞ்சேரி பிரிவு சாலை அருகே உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தூய்மை பணியாளர்களால் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்படுகின்றன.

மக்கும் குப்பைகள் பேரூராட்சி குப்பை கிடங்கில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் இயற்கை உரமாகவும், மண்புழு உரமாகவும் தயார் செய்யப்படுகிறது. இந்த உரங்கள் கறம்பக்குடி பகுதி விவசாயிகளுக்கு மலிவு விலையில் வழங்கப்படுகின்றன. 20 கிலோ இயற்கை உரம் ரூ.30-க்கும், மண்புழு உரம் கிலோ ரூ.10-க்கும் விற்கப்படுகிறது. தரமான இந்த உரங்களை விவசாயிகள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

மேலும், இந்த இயற்கை உரத்தை பயன்படுத்தி குப்பை கிடங்கையே காய்கறி தோட்டமாக தூய்மை பணியாளர்கள் மாற்றி உள்ளனர். இங்கு கத்தரி, வெண்டை, தக்காளி, பரங்கிக்காய், சுரைக்காய், சுண்டைக்காய், வாழை போன்றவை பயிரிடப்பட்டுள்ளன. 

இதுகுறித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், குப்பை கிடங்கு உள்ள சாலையில் சென்றாலே மூக்கை மூடிகொண்டுதான் அனைவரும் செல்வார்கள். ஆனால் தற்போது குப்பை கிடங்கே பசுமை தோட்டமாக மாறி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அர்பணிப்பு உணர்வோடு இப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், அலுவர்கள் பாராட்டுகுரியவர்கள் என தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments