ஹஜ் பயணிகள் 10-ந் தேதிக்குள் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.. பாஸ்போர்ட் அதிகாரி வேண்டுகோள்.!!ஹஜ் பயணிகள் வருகிற 10-ந் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று பாஸ்போர்ட் அதிகாரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவுள்ள பயணிகள் தங்களது பாஸ்போர்ட்டுகள் மற்றும் இதுதொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு வருகிற 10-ந் தேதி கடைசி நாளாகும். கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகள் செல்லாது. கணினி முறையில் பதிவு செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் ஆயுள் காலம் 11-1-2022 வரை இருக்க வேண்டும்.

எனவே விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே விண்ணப்பம் செய்து இதுவரை பாஸ்போர்ட் கிடைக்க பெறாதவர்கள் (போலீஸ் விசாரணை முடிந்துவிட்ட நிலையில்) திருச்சி மரக்கடையிலுள்ள பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பத்தின் தற்போதைய நிலை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மேலும் ஹஜ் பயணிகளுக்கு உதவுவதற்காக மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தனியாக ஒரு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையத்தில் பாஸ்போர்ட் தொடர்பான விவரங்களை நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ, இ-மெயில் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம். இந்த உதவி மையம் வருகிற 10-ந்தேதி வரை இயங்கும்.

மேலும் விவரங்களுக்கு 0431-2707203, 2707404 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். rpo.trichy@mea.gov.in என்ற மின்னஞ்சல் மற்றும் www.passportindia.gov.in என்ற இணையதளம் 1800 258 1800 என்ற கட்டணமில்லா தொலைபேசி ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம் என்று திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஆர்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments