மனிதநேய மக்கள் கட்சியின் ஆலங்குடி நகர தேர்தல் அலுவலகம் திறப்பு!மனிதநேய மக்கள் கட்சியின் ஆலங்குடி நகர தேர்தல் அலுவலகம் ஆலங்குடி பெரிய பள்ளிவாசல் அருகில் திறக்கப்பட்டது.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆலங்குடி தொகுதி திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் MCA, அவர்கள் வருகை தந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை சந்தித்து சிறப்புரையாற்றி மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு பொன்னாடை போற்றி ஆதரவு கோரினார்.
இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அரசை ஜகுபர் அலி, அப்துல் ஜலீல், முகமது ஆரிப், அக்பர் அலி, முகமது அபூபக்கர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர் கிளை நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
மனிதநேய மக்கள் கட்சியின் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் சகோதரர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களை வெற்றி பெற அயராது அனைவரும் உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments