புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை (தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய 6 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் பலர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். மனுக்கள் பரிசீலனையில் 123 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

இந்தநிலையில் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்ட நிலையில், போட்டியிட விருப்பம் இல்லாமல் அதனை இன்று (திங்கட்கிழமை) திரும்ப பெறலாம். இதைத்தொடர்ந்து 6 சட்டமன்ற தொகுதிகளிலும் இறுதிவேட்பாளர் பட்டியல் இன்று மாலை 3 மணிக்கு மேல் வெளியிடப்படும். இதில் அந்தந்த தொகுதிகளில் எத்தனை பேர் போட்டியிடுவார்கள் என்பது தெரிந்துவிடும்.

மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதிகளில் வேட்பு மனுக்கள் ஏற்கபட்டதன் நிலவரப்படி அதிகபட்சமாக விராலிமலையில் 25 பேரும், குறைந்தபட்சமாக ஆலங்குடியில் 13 பேரும் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியான பின் சுயேச்சைகளுக்கும் சின்னம் ஒதுக்கப்பட்ட பின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிக்காக அந்த சீட்டினை அச்சடிக்கும் பணி தொடங்கி விடும்.

அந்தப்பணி முடிவடைந்ததும், அதனை அந்தந்த சட்டமன்ற தொகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணி நடைபெறும். இவை முடிந்து மீண்டும் பாதுகாப்பாக வைக்கப்பட்ட பின் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments