அறந்தாங்கியில் பாதை பிரச்சனைக்காக சப்-கலெக்டர் அலுவலகத்தில் சமையல் செய்து நூதன போராட்டம்!அறந்தாங்கி அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பாதை பிரச்சினையில் ஒரு தரப்பினர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சமையல் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி அருகே காடை இடையாத்தூர் கிராமத்தில் இரண்டு தரப்பினர் வசித்து வருகின்றனர். இதில், ஒரு தரப்பினருக்கு கடந்த 1996-ம் ஆண்டு அரசு சார்பாக பட்டா வழங்கப்பட்டதாகவும், அதில் மற்றொரு தரப்பினர் செல்லும் பாதையையும் சேர்த்து பட்டா வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அந்தப்பாதையை இருதரப்பினரும் பயன்படுத்தி வந்தநிலையில் ஒரு தரப்பினர் பட்டா உள்ளதாக கூறி அந்த பாதையை அடைத்துள்ளனர். இதுதொடர்பாக மற்றொரு தரப்பினர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், விரக்தி அடைந்த ஒரு தரப்பினர் அறந்தாங்கி சப்-கலெக்டர் வளாகத்தில் அடுப்பு வைத்து சமைத்து சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசீலன், தாசில்தார் ஜமுனா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments