தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ‘அறப்போர் இயக்கம்-எம்பவரிங் சிட்டிசன்ஸ்' எனப்படும் புதிய செயலியை அறப்போர் இயக்கம் நேற்று அறிமுகப்படுத்தியது.
இந்த நிகழ்ச்சி சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள அறப்போர் இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக மக்கள் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விவரங்களை அறிந்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த செயலியை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதன்மூலம் மட்டுமே இந்தியாவை ஜனநாயக அடிப்படையில் செயல்படக்கூடிய நாடாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்த முயற்சியில் இறங்கி உள்ளோம்.
வேட்பாளர்கள் வேட்புமனுவில் தெரிவித்த தகவல்கள் அடிப்படையிலேயே அனைத்து தகவல்களும் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் கல்வித்தகுதி, அவர்கள் செய்து வரும் தொழில், அவர்களது வருமானம், சொத்து விவரம், கடன் விவரம், குற்ற வழக்கு போன்ற அனைத்து விவரங்களையும் இந்த செயலி மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். முறையான அனுமதியின்றி பெருமளவு சொத்து குவித்த வேட்பாளர்கள், குறுகிய காலத்தில் அதிக வருமானம் ஈட்டிய வேட்பாளர்கள், மிக தீவிர குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் போன்றோரை அடையாளம் காண இந்த செயலி உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
செயலியில் திருத்தங்கள் இருந்தால் அறப்போர் இயக்கத்தின் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
9884996224
8072902947
டவுன்லோடு செய்ய: http://bit.ly/Arappor_android_app
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.